ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது


ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Aug 2021 1:02 AM IST (Updated: 23 Aug 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

பாளையங்கோட்டை போலீசார் நேற்று குருந்துடையார்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்து, நெல்லை மாவட்ட குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசி, கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story