நாங்குநேரியில் 60 மி.மீ. மழை கொட்டியது


நாங்குநேரியில் 60 மி.மீ. மழை கொட்டியது
x
தினத்தந்தி 23 Aug 2021 1:19 AM IST (Updated: 23 Aug 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரியில் 60 மி.மீ. மழை கொட்டியது. முனைஞ்சிப்பட்டி அருகே மின்னல் தாக்கி 2 பசு மாடுகள் இறந்தன.

நெல்லை:
நாங்குநேரியில் 60 மி.மீ. மழை கொட்டியது. முனைஞ்சிப்பட்டி அருகே மின்னல் தாக்கி 2 பசு மாடுகள் இறந்தன.

பரவலாக மழை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வெப்பம் குறைந்து வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. நேற்று முன்தினம் இரவில் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதில் நாங்குநேரி பகுதியில் 60 மில்லி மீட்டர் மழை கொட்டியது. களக்காட்டில் 26 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 

இதேபோல் தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி அணை பகுதியில் 8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து, வானம் மேகமூட்டமாக இருந்தது.

பசு மாடுகள் சாவு

முனைஞ்சிப்பட்டி அருகே வடக்கு கழுவூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பா (வயது 40), விவசாயி. இவருடைய மனைவி பிரேமா (35). இவர் நேற்று தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார். 

மேலும் அவர்கள் வளர்த்து வந்த மாடுகளும் அங்கு கட்டப்பட்டு இருந்தது. மதியம் 1 மணி அளவில் கருமேகம் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
இதில் திடீரென்று மின்னல் தாக்கியதில் 2 பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. மின்னல் தாக்கியதில் பிரேமாவின் 2 காதுகளும் செவிடாகின. தோட்டத்தில் உள்ள 2 தென்னை மரங்களும் தீப்பிடித்து எரிந்து பிளந்தன.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வடக்கு விஜயநாராயணம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மின்னல் தாக்கியதில் 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story