பெங்களூருவில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 14 பேர் கைது; ரூ.7.81 கோடி பொருட்கள் மீட்பு


பெங்களூருவில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 14 பேர் கைது; ரூ.7.81 கோடி பொருட்கள் மீட்பு
x
தினத்தந்தி 23 Aug 2021 2:00 AM IST (Updated: 23 Aug 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு தென்கிழக்கு மண்டலத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.7 கோடியே 81 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

இருசக்கர வாகனங்கள் திருட்டு

  பெங்களூரு தென்கிழக்கு மண்டலத்தில் உள்ள பேகூர், உளிமாவு, பரப்பன அக்ரஹாரா, எலெக்ட்ரானிக் சிட்டி, சுத்தகுண்டேபாளையா, மைகோ லே-அவுட் போலீசார் தங்களது எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்தனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

  பேகூர் போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக ஒருவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பன்னரகட்டாவை சேர்ந்த கூட்டாளியும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் பசவேஸ்வரா நகர், கே.எஸ். லே-அவுட், புட்டேனஹள்ளி, உளிமாவு, கிரிநகர், கோனனகுண்டே, மைகோ லே-அவுட் ஆகிய பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும் இருசக்கர வாகனங்களை கள்ளச்சாவியை பயன்படுத்தி திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதுபோல பேகூர் போலீசார் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.33 லட்சம் மதிப்பிலான 500, 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திமிங்கல உமிழ்நீர்

  உளிமாவு போலீசார் தங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.61½ லட்சம் மதிப்பிலான 17½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

  இதுபோல பரப்பன அக்ரஹாரா போலீசார் போதைப்பொருள் விற்ற 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான அபின் உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் திமிங்கல உமிழ்நீரை விற்றதாக 2 பேரை கைது செய்த பரப்பன அக்ரஹாரா போலீசார் ரூ.5 கோடியே 10 லட்சம் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீரை பறிமுதல் செய்து கொண்டனர்.

ரூ.7.81 கோடி

  எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் அபின் விற்பனை செய்தவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 250 கிராம் அபின் பறிமுதல் செய்யப்பட்டது. சுத்தகுண்டேபாளையா போலீசார் வீடு புகுந்து தங்கநகைகளை திருடிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் மதிபபிலான 702 கிராம் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

  மைகோ லே-அவுட் போலீசார் வீடு புகுந்து திருடியவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.23 லட்சம் மதிப்பிலான 508 கிராம் தங்கநகைகள், 2 கிலோ 100 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக 36 வழக்குகளில் 14 பேரை கைது அவர்களிடம் இருந்து 19 இருசக்கர வாகனங்கள், 1 பி.எம்.டபுள்யூ கார், 1 கிலோ 210 கிராம் தங்கநகைகள், 2 கிலோ 100 கிராம வெள்ளி பொருட்கள், ரூ.33 லட்சம் கள்ளநோட்டுகள், ரூ.5 கிலோ திமிங்கல உமிழ்நீரை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7 கோடியே 81 லட்சம் ஆகும்.

Next Story