மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே புதுநடுவலூர் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் பால்குட விழா நேற்று நடந்தது. இதையொட்டி விரதமிருந்த பக்தர்கள், நேற்று காலை புதுநடுவலூர் முருகன் கோவிலில் இருந்து தலையில் பால்குடத்தை சுமந்தபடி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அருள் வந்து பெண் பக்தர்கள் பலர் சாமியாடினர். இதையடுத்து பக்தர்களின் பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, பின்னர் மகா மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் சீனிவாசன், அவரது குடும்பத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். மேலும் இரவில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பொங்கலிட்டும், மாவிளக்கு பூஜை செய்தும் வாண வேடிக்கையுடன் வழிபாடு நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story