கொரோனாவால் 2 பேர் உயிரிழப்பு
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கொரோனாவால் 2 பேர் உயிரிழந்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 14 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 4 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 23 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஒருவரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 65 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 180 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story