மெக்கானிக்கை தாக்கிய 8 பேர் கைது


மெக்கானிக்கை தாக்கிய 8 பேர் கைது
x
தினத்தந்தி 23 Aug 2021 2:16 AM IST (Updated: 23 Aug 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

மெக்கானிக்கை தாக்கிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்:

மெக்கானிக்
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் அன்பரசன் (வயது 31). இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் மெக்கானிக்கான இவர் நேற்று மதியம் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அரணாரையை சேர்ந்த பாஸ்கரன் மகன் பார்த்தீபன் (26) ஒரு கும்பலுடன் வந்து அன்பரசனை வழிமறித்துள்ளார். மேலும் அவரிடம் பார்த்திபன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டி, அவரது சட்டை பையில் இருந்த ரூ.500-ஐ பறித்ததாகவும், மற்றவர்களுடன் சேர்ந்து அன்பரசனை தாக்கியதாகவும் தெரிகிறது. அப்போது அங்கு அன்பரசனின் அண்ணன் வந்துள்ளார்.
8 பேர் கைது
இதையடுத்து பார்த்திபனும், அவருடன் இருந்தவர்களும் சேர்ந்து அன்பரசனுக்கும், அவரது அண்ணனுக்கும் கல்லை காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இது தொடர்பாக அன்பரசன் கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபன், அரணாரையை சேர்ந்த தினேஷ் (25), பெரம்பலூர் பெரியார் சிலை பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்த ரமேஷ் (36), திருநகரை சேர்ந்த தீபன் (21), ரமேஷ் (27), மணிகண்டன் (26), காமராஜர் வளைவை சேர்ந்த கார்த்திக் (30), சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவை சேர்ந்த முகமது சித்திக் (37) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

Next Story