தொழிலாளியிடம் பணம் பறித்த 4 பேர் கைது
தொழிலாளியிடம் பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்
மலைக்கோட்டை
திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 42). கூலித் தொழிலாளியான இவர் நேற்று சிந்தாமணி அண்ணாசிலை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் மாரிமுத்துவை கத்தியை காட்டி மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவிடம் பணம் பறித்து சென்ற சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த தினேஷ் என்கிற தினேஷ்குமார் (வயது 21) பதுவை நகரை சேர்ந்த ஆளவந்தான் என்கிற மகேஸ்வரன் (25) பிரிட்டன் பத்திரி தெருவைச் சேர்ந்த முகில் என்கிற முகில் குமார் (25) மேல சிந்தாமணியை சேர்ந்த பாண்டவிஜய் என்கிற விஜய் (19) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story