நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று திறப்பு; தியேட்டர்களில் தூய்மை பணி தீவிரம்


நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று திறப்பு; தியேட்டர்களில் தூய்மை பணி தீவிரம்
x
தினத்தந்தி 23 Aug 2021 12:35 PM IST (Updated: 23 Aug 2021 12:35 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக நீண்ட நாட்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இனறு (திங்கட்கிழமை) முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்தது.

இநதநிலையில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் தூய்மை பணிகளை நேற்று காலை முதலே ஊழியர்கள் தொடங்கினர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இருக்கைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது. வழிகாட்டு நெறிமுறைப்படி ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் இடையில் இடைவெளி விட்டு எச்சரிக்கை சீட்டு ஒட்டப்பட்டுள்ளது. செங்கல்பட்டிலும் தியேட்டர்களை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.

Next Story