செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மேற்கூரை இடிந்து விழுந்தது: கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்த பொதுப்பணித்துறையினர்


செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மேற்கூரை இடிந்து விழுந்தது: கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்த பொதுப்பணித்துறையினர்
x
தினத்தந்தி 23 Aug 2021 12:56 PM IST (Updated: 23 Aug 2021 12:56 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மேற்கூரை இடிந்து விழுந்தது குறித்து பொதுப்பணித்துறையினர் கலெக்டர் ராகுல்நாத்திடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

மேற்கூரை இடிந்து விழுந்தது
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தாய்சேய் நல பிரிவில் உள்ள மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது‌. இதில் அந்த வார்டில் சிகிச்சை பெற்று வந்த திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த எடப்பாளையம் பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவரது மனைவி லோகேஸ்வரியின் படுக்கை மீது விழுந்தது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக தாயும், சேயும் உயிர்தப்பினர். தொடர்ந்து அந்த வார்டில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை வேறு வார்டுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் மாற்றினர். இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மேற்கூரை இடிந்து விழுந்த கட்டிடத்தை ஆய்வு செய்தனர்.

அறிக்கை சமர்ப்பிப்பு
பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் கடந்த 1977-ம் ஆண்டு இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது எனவும், இந்த விபத்தில் மருத்துவ பணியாளர்களுக்கோ அல்லது நோயாளிகளுக்கோ எந்தவித காயமும் ஏற்படவில்லை எனவும் தெரிய வந்தது. மேலும் ஆஸ்பத்திரி மேற்கூரையின் புறபூச்சு பணிகள் நடந்து வருவதாகவும், இந்த கட்டிடம் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதால் புனரமைக்க அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த கட்டிடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தகுதி வாய்ந்ததாக உள்ளதாக மாவட்ட கலெட்டர் ராகுல்நாத்துக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

Next Story