தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கிராம மக்கள் வலியுறுத்தல்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் வலியுறுத்தி மனு கொடுத்துள்ளனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், “எங்கள் கிராமம் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எங்கள் கிராமத்தில் 900 வீடுகள் உள்ளன. இங்கு 3 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் 200 பேர் ஸ்டெர்லைட் ஆலை மூலம் மறைமுக வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடிக்கிடப்பதால் வேலைவாய்ப்பை இழந்த இளைஞர்கள், அவர்களின் குடும்பத்தினர் பெரும் பொருளாதார இழப்புக்கு ஆளாகி உள்ளனர். அதே போன்று ஸ்டெர்லைட் வேதாந்தா சமுதாய வளர்ச்சி பணித்துறை மூலம் பெண்களுக்கு சுயதொழில் தொடங்க பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் மூலம் 500 குடும்பங்கள் பயன்பெற்று வந்தன. ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் குடிநீர் வினியோகமும் செய்யப்பட்டு வந்தது. கொரோனா நிவாரண உதவிகள், பள்ளிக்கூடத்துக்கு தேவையான உதவிகள் வழங்கினர். ஆனால் தற்போது மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளோம். ஆகையால் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story