ஸ்கேட்டிங்கில் சாதித்த மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டு
ஸ்கேட்டிங்கில் சாதித்த மாணவர்களை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளி உள் விளையாட்டு அரங்கில் தூத்துக்குடியை சேர்ந்த 5 முதல் 18 வயது பள்ளி மாணவ மாணவிகள் 34 பேர் கலந்து கொண்டு தொடர்ந்து 75 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து சாதனை நிகழ்த்தி உள்ளனர். இந்த சாதனையை பாராட்டி யுனிகோ வேர்ல்டு நிறுவனம் சான்றிதழ் வழங்கி உலக சாதனையில் இடம்பெற செய்து உள்ளது.
இந்த சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் 7 பேர் நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, மாணவர்கள் மேலும் பல சாதனை படைக்க வேண்டும் என்று பாராட்டினார்.
Related Tags :
Next Story