அரசு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு: தூத்துக்குடி கடற்கரை, பூங்காக்களில் மக்கள் குதூகலம்


அரசு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு: தூத்துக்குடி கடற்கரை, பூங்காக்களில் மக்கள் குதூகலம்
x
தினத்தந்தி 23 Aug 2021 7:52 PM IST (Updated: 23 Aug 2021 7:52 PM IST)
t-max-icont-min-icon

அரசு கூடுதல் தளர்வுகள் அறித்துள்ளதன் எதிரெலியாக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடற்கரை மற்றும் பூங்காக்களுக்கு மக்கள் சென்று குதூகலமாக பொழுதை கழித்தனர்.

தூத்துக்குடி:
அரசு கூடுதல் தளர்வுகள் அறித்துள்ளதன் எதிரெலியாக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடற்கரை மற்றும் பூங்காக்களுக்கு மக்கள் சென்று குதூகலமாக பொழுதை கழித்தனர்.
கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று முதல் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்து உள்ளது. சினிமா தியேட்டர்களை திறக்கவும், பூங்காக்கள், கடற்கரை பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், மதுபான பார்களை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் நேற்று காலை முதல் முழுமையாக செயல்பட தொடங்கின. ஏற்கனவே உடற்பயிற்சி, நடைபயிற்சிக்காக காலையில் சில மணி நேரங்கள் மட்டும் பூங்காக்கள் திறக்கப்பட்டு வந்தன. தற்போது முழுமையாக திறக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் ஆர்வமாக பூங்காக்களுக்கு சென்று பொழுதை கழித்தனர். இதே போன்று தூத்துக்குடியில் உள்ள துறைமுகம் கடற்கரை பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் புதிய துறைமுக கடலில் சிறுவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மதுபான பார்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுபான கூடங்கள் அனைத்தும் நேற்று மதியம் முதல் செயல்பட தொடங்கின. இதனால் மதுபான பிரியர்கள், நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் மதுக்கூடங்களில் அமர்ந்து மதுபானங்களை குடித்தனர். மாவட்டம் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்த தியேட்டர்கள் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது.
நேற்று தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டாலும், தியேட்டர்கள் எதுவும் செயல்படவில்லை. புதிய படங்கள் ஒளிபரப்புவதற்கு வசதியாக பெரும்பாலான தியேட்டர்களில் வருகிற வெள்ளிக்கிழமை முதல் திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Next Story