திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா


திருப்பூர் மாவட்டத்தில்  மேலும் 68 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Aug 2021 9:30 PM IST (Updated: 23 Aug 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா

திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்றும் குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 750-ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 68 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 984-ஆக உள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 851 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 915-ஆக உள்ளது. 

Next Story