அவினாசி அருகே லாரிகள் மோதல் தார் கொட்டியதில் டிரைவர் பலி


அவினாசி அருகே லாரிகள் மோதல் தார் கொட்டியதில் டிரைவர் பலி
x
தினத்தந்தி 23 Aug 2021 9:33 PM IST (Updated: 23 Aug 2021 9:33 PM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே லாரிகள் மோதல் தார் கொட்டியதில் டிரைவர் பலி

அவினாசி
கர்நாடக மாநிலம் மங்களுரிலிருந்து தார் லோடு ஏற்றிகொண்டு ஒரு லாரி சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த லாரி அவினாசி பைபாஸ் ரோட்டில் ராக்கியாபாளையம் பிரிவு அருகே சென்றபோது அவினாசியை அடுத்து தெக்கலூரிலிருந்து பனியன் சரக்கு  பெட்டிகளை ஏற்றிகொண்டு தூத்துக்குடி நோக்கி சென்ற லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தார்லோடு ஏற்றிச்சென்ற லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் லாரி பக்கவாட்டில் கவிழ்ந்தது. 
இதனால் தார் லோடு லாரியியின் பின்பகுதி உடைந்து அதிலிருந்த தார் பின்னால் மோதிய லாரி டிரைவரின் உடல் முழுவதும் கொட்டியது. இதில் படுகாயமடைந்த லாரி டிரைவர் திருப்பூரை சேர்ந்த ஜெயபால் மகன் கவியரசன் (வயது37) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.


Next Story