திருவள்ளுவர் சிலை நிறுவ வேண்டும்


திருவள்ளுவர் சிலை நிறுவ வேண்டும்
x
தினத்தந்தி 23 Aug 2021 9:48 PM IST (Updated: 23 Aug 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் திருவள்ளுவர் சிலையை நிறுவ வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்:

நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஜெயசுந்தர் தலைமையில் செயலாளர் சின்னமாயன், பொருளாளர் மரியகுணசேகரன் உள்பட ஏராளமானோர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். 

அந்த மனுவில், திண்டுக்கல்லில் தனியார் பள்ளி முன்பு வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. அந்த சிலையை திண்டுக்கல் நகரில் நிறுவ வேண்டும்.

மேலும் மாவட்டத்தில் காடுகள் அழிப்பு, ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் இயற்கை சூழல் அழிந்து, வறண்ட நிலமாக மாறி வருகிறது. எனவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வனப்பகுதியை மீட்க வேண்டும். 

இதுமட்டுமின்றி மண் சார்ந்த மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். புதிதாக கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்க கூடாது. விதிகளை மீறும் கல்குவாரிகளை மூட வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சி முழுவதும் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

Next Story