காணொலி காட்சி வாயிலாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்; கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது


காணொலி காட்சி வாயிலாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்; கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 23 Aug 2021 10:07 PM IST (Updated: 23 Aug 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், காணொலி காட்சி வாயிலாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார்.

இதில் 8 தாசில்தார் அலுவலகங்கள், 15 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், 5 நகராட்சி அலுவலகங்கள், 19 பேரூராட்சி அலுவலகங்கள் என மொத்தம் 47 இடங்களில் இருந்து 17 மனுதாரர்கள் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அதிகாரிகளிடம் வழங்கினர்.

அறிவுறுத்தல்

மனுதாரர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய கலெக்டர், அவர்களின் குறைகளை கேட்டறிந்ததுடன், மனு சம்பந்தமான துறையினரை காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு உடனடியாக தீர்வு வழங்க அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ரமேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகனசுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மரகதவள்ளி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேலு உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story