கோவையில் இருந்து கர்நாடகா ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கம்
கோவையில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதன்படி கர்நாடகா, ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பூங்காக்களில் பொதுமக்கள் குவிந்தனர்.
கோவை
கோவையில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதன்படி கர்நாடகா, ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பூங்காக்களில் பொதுமக்கள் குவிந்தனர்.
வெளிமாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கம்
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் கூடுதல் தளர்வு கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. கோவை மாவட்டத்தில் இந்த தளர்வுகள் அமலுக்கு வந்தன. இதன் காரணமாக கோவையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
கோவை காந்திபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு காலை 9, 9.30, 10, 10.30 மணிக்கும், இரவு 9, 9.30, 10, 10.30 மணிக்கும் என 8 பஸ்கள் இயக்கப்பட்டன.
இதேபோல் ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இரவு 6.30, 7.30, 8 மணிக்கு என 3 பஸ்கள் புறப்பட்டு சென்றன. இந்த பஸ்களில் பயணிகள் யாரும் முன்பதிவு செய்து பயணம் செய்யவில்லை.
முதல் நாள் என்பதால் குறைந்த அளவிலே பயணிகள் பயணம் செய்தனர். கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் கோவையில் இருந்து கேரளாவிற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
பூங்காக்கள் திறப்பு
கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா திறக்கப் பட்டது. நீண்ட நாட்கள் கழித்து திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அங்கு குவிந்தனர். பின்னர் அவர்கள் பூங்காக்களில் இருந்த பறவைகள், முதலைகள், மான்களை பார்த்து மகிழ்ந்தனர்.
அப்போது சிலர் அங்கிருந்த விலங்குகளுடன் செல்பியும் எடுத்துக் கொண்டனர். பூங்காவுக்கு வந்த பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இரவு 10 மணி வரை
நீச்சல் குளங்களில் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டியது இருப்ப தால் ஒரு சில நாட்களில் திறக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி கள் தெரிவித்தனர். இதேபோல் தனியார் பார்களில் அமர்ந்து மது குடிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அதுபோன்று கோவை மாவட்டத்தில் இரவு 10 மணி வரை கடைகளை திறக்க வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும் ஐ.டி. நிறுவனங்களில் 100 சதவீத பணியாளர்கள் வேலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சிலர் தங்களின் சொந்த ஊருக்கு சென்று உள்ளதால், அவர்கள் சில நாட்களுக்குள் வேலைக்கு திரும்புவார்கள் என்று சக ஊழியர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story