விழுப்புரம் கோர்ட்டில் 2 பேர் சரண்


விழுப்புரம் கோர்ட்டில் 2 பேர் சரண்
x
தினத்தந்தி 23 Aug 2021 10:58 PM IST (Updated: 23 Aug 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

வாலிபர் கொலை வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனர்.

விழுப்புரம், 

காஞ்சீபுரம் மாவட்டம் விப்பேடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் பிரேம்குமார் (வயது 25). இவர் கடந்த 21-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், விப்பேடு காலனி பகுதியில் தலை, கழுத்து, மார்பு, தொடை உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயத்துடன் கொலை செய்யப்பட்டு  கிடந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேம்குமார், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் பிரேம்குமாரை கொலை செய்தனரா? அல்லது தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா? என்றும் ஏதேனும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

விழுப்புரம் கோர்ட்டில் 2 பேர் சரண்

இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தங்களை தேடுவதை அறிந்த காஞ்சீபுரம் விப்பேடு பகுதியை சேர்ந்த சுகுமார் மகன் சுரேன் (33), பூபாலன் மகன் விக்னேஷ் (23) ஆகிய 2 பேர் நேற்று காலை விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி அருண்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் 2 பேரும் விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story