குடியாத்தத்தில் திருடிய பொருட்களை வாட்ஸ் அப் மூலம் விற்பனை செய்ய முயற்சி.
குடியாத்தத்தில் திருடிய பொருட்களை, விற்பனைக்கு உள்ளதாக வாட்ஸ் அப்பில் பதிவிட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து, பொருட்களை பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம்
குடியாத்தத்தில் திருடிய பொருட்களை, விற்பனைக்கு உள்ளதாக வாட்ஸ் அப்பில் பதிவிட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து, பொருட்களை பறிமுதல் செய்தனர்.
வாட்ஸ் அப்பில் பதிவிட்டனர்
குடியாத்தத்தை அடுத்த தரணம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகமது ரபீக். குடியாத்தம் பலமநேர்ரோடு காத்தாடி குப்பம் பகுதியில் பீரோக்கள் தயார் செய்யும் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவர் கடந்த 20-ந் தேதி கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த வெல்டிங் மிஷின் உள்ளிட்ட சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் முகமது ரபீக் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் முகமது ரபீக் கடையில் திருட்டுபோன வெல்டிங் மிஷின் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாக வாட்ஸ் அப்பில் 2 வாலிபர்கள் பதிவிட்டு இருந்தனர்.
2 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக முகமது ரபீக் குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்- இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வாட்ஸ் அப்பில் பதிவிட்டவர்கள் முகமது ரபீக் கடையில் சில தினங்கள் மட்டுமே வேலை செய்துவிட்டு நின்றுவிட்ட குடியாத்தம் தரரணம் பேட்டை காசிம் சாகிப் தெருவைச் சேர்ந்த முஜ்ஜமில் (வயது 24), கோபாலபுரம் செக்குமேடு பகுதியைச் சேர்ந்த அசீம் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து லட்சுமணாபுரம் பகுதியில் வைத்து முஜ்ஜமில் மற்றும் அசீமை போலீசார் கைது செய்தனர் மேலும் அவர்களிடம் இருந்து, வெல்டிங் மிஷின் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.
Related Tags :
Next Story