முதுமக்கள் தாழியில் இருந்த எலும்புகள் சேகரிப்பு


முதுமக்கள் தாழியில் இருந்த எலும்புகள் சேகரிப்பு
x
தினத்தந்தி 23 Aug 2021 11:20 PM IST (Updated: 23 Aug 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

கொந்தகையில் முதுமக்கள் தாழியில் இருந்த எலும்புகள் சேகரிக்கப்பட்டன

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. கீழடி மட்டுமின்றி கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அகழாய்வு பணி நடக்கிறது. கீழடியில் பெண்கள் காதில் அணியும் தங்க ஆபரணம், உறை கிணறு, பாசிமணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தன. கொந்தகையில் 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைக்க பெற்றன. இந்த நிலையில் கொந்தகையில் நேற்று ஒரு முதுமக்கள் தாழியை திறந்து உள்ளே இருக்கும் மண்ணை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. அதில் இருந்த மனித எலும்புகள் சேகரிக்கப்பட்டன. இதன் பின்பு தான் உள்ளே இருக்கும் பொருட்கள் பற்றிய விவரம் கிடைக்கும் என தெரிய வருகிறது. முதுமக்கள் தாழியில் உள்ள மனித எலும்புகள் எந்த நூற்றாண்டை சேர்ந்தது என ஆய்வுக்கு பின்னரே தெரிய வரும்.

.

Next Story