கொரோனா தடுப்பூசி செலுத்த மக்கள் தயங்க கூடாது


கொரோனா தடுப்பூசி செலுத்த மக்கள் தயங்க கூடாது
x
தினத்தந்தி 23 Aug 2021 11:25 PM IST (Updated: 23 Aug 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி செலுத்த மக்கள் தயங்க கூடாது என்று, மாவட்ட கலெக்டர் லலிதா கூறினார்.

மயிலாடுதுறை;
கொரோனா தடுப்பூசி செலுத்த மக்கள் தயங்க கூடாது என்று, மாவட்ட கலெக்டர் லலிதா கூறினார்.
தடுப்பூசி மையம் 
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் லலிதா கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி மையத்தை தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் லலிதா கூறியதாவது 
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்  ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது.  தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுக்கு இணங்க மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 24 மணி நேரமும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். 
தயக்கமின்றி தடுப்பூசி
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 2 லட்சத்து 15 ஆயிரத்து 931 பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 35 ஆயிரத்து 387 பேருக்கும் என மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 318 பேருக்கு 
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை பொறுத்தவரை தேவைக்கு ஏற்ப போதுமான அளவு கையிருப்பு உள்ளது. பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் மகேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரத்சுந்தர் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story