20 மூட்டை குட்கா, கஞ்சா பறிமுதல். 4 பேர் கைது
20 மூட்டை குட்கா, கஞ்சா பறிமுதல். 4 பேர் கைது
தூசி
தூசி அருகே 20 மூட்டை குட்கா, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
குட்கா பொருட்கள்
தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் நேற்று மாலை 6 மணியளவில் அப்துல்லாபுரம் சோதனைச்சாவடியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக காஞ்சீபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடம் 7 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
கடத்தி வந்தவர்களான காஞ்சீபுரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (வயது 24), விக்னேஷ் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காஞ்சீபுரம் விளக்கடி கோவில் தோப்புத்தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் வீட்டின் பின்பக்கம் மறைத்து வைத்திருந்த 20 மூட்டை குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ெசல்வராஜ் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா
அதேபோல் காஞ்சீபுரத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் தூசியை நோக்கி வந்த ஒரு மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். மோட்டார்சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் 150 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அவர், செய்யாறு தாலுகா ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் முனிரத்னம் (21) எனத் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா, மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story