புதிய படங்கள் இல்லாததால் தியேட்டர்கள் திறப்பு தள்ளி வைப்பு


புதிய படங்கள் இல்லாததால் தியேட்டர்கள் திறப்பு தள்ளி வைப்பு
x
தினத்தந்தி 23 Aug 2021 11:53 PM IST (Updated: 23 Aug 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

அரசு அனுமதி வழங்கியும் கூட புதிய படங்கள் வெளியாகாததால் தியேட்டர்கள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

காரைக்குடி,

அரசு அனுமதி வழங்கியும் கூட புதிய படங்கள் வெளியாகாததால் தியேட்டர்கள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

தியேட்டர் திறக்க அனுமதி

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த 4 மாதங்களுக்கு பின்னர் நேற்று முதல் மீண்டும் இயங்க அரசு அனுமதி வழங்கியது. முன்னதாக தமிழகம் முழுவதும் தியேட்டர்களை அதன் ஊழியர்கள் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் தற்போது புதிய படங்கள் எதுவும் கைவசம் இல்லாததால் நேற்று முதல் தியே ட்டர்கள் இயக்கப்படவில்லை.

ரசிகர்கள் ஏமாற்றம்

மாவட்டத்தை பொறுத்தரை காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், மானாமதுரை உள்ளிட்ட பகுதியில் மட்டும் தற்போது ஒரு சில தியேட்டர்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று முதல் தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி வழங்கியிருந்தாலும் கூட கைவசம் புதிய படங்கள் ஏதும் இல்லாததல் நேற்று இந்த தியேட்டர்கள் இயங்கப்படவில்லை. மேலும் சில தியேட்டர்களில் நேற்றும் துப்புரவு பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.ஒரு சில தியேட்டர்களில் இன்று காட்சி ஏதும் இல்லை எனவும், இன்று காட்சிகள் ரத்து எனவும் அறிவிப்பு பலகைகள் வைத்திருந்தனர்.
இதற்கிடையே தியேட்டர்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் பெரும்பாலான சினிமா ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சினிமா காட்சிகள் இயக்கப்படாததால் பெரும்பாலான தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

27-ந்தேதி புதிய படங்கள்

வருகிற 27-ந்தேதி அன்று புதிய படங்கள் வெளியிடப்படுகின்றன. எனவே அன்று முதல் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பு உள்ளது என்று தியேட்டர் உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

Next Story