பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்


பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
x

1-ந்தேதி முதல் திறக்க அனுமதி அளித்து உள்ளதால் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம் அடைந்து உள்ளது.

காரைக்குடி,

கொரோனா தொற்று குைறந்ததை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற செம்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான பள்ளி வகுப்பு திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நடைபெறும் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளி தலைமையாசிரியர் பீட்டர்ராஜா தலைமையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணியாளர்கள் மூலம் பள்ளி வகுப்பறை, பள்ளி வளாகம், கழிப்பறை, முகப்பு பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி வகுப்பறை முழுவதும் தண்ணீர் மூலம் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்றது. இதுதவிர பள்ளி பதிவேடுகள், பராமரிப்பு அறை உள்ளிட்டவைகள் பராமரிப்பு பணிகளும் நடைபெற்றது.


Next Story