புகையிலை பொருட்களை விற்ற பேக்கரி, டீக்கடைக்கு சீல்


புகையிலை பொருட்களை விற்ற பேக்கரி, டீக்கடைக்கு சீல்
x
தினத்தந்தி 24 Aug 2021 12:06 AM IST (Updated: 24 Aug 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற பேக்கரி மற்றும் டீக்கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

வெள்ளியணை, 
திடீர் சோதனை
கரூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்டத்திலுள்ள டீக்கடைகள், பெட்டிக்கடைகள், மளிகை கடைகள், பேக்கரி கடைகள் ஆகியவற்றில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிைலயில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி தலைமையில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் முனிராஜ், மதுரைவீரன், ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் கடவூர் ஒன்றியம் காணியாளம்பட்டி அருகே உள்ள நன்னிபாறை பகுதியில் செயல்படும் பேக்கரி கடையில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பேக்கரிக்கு சீல் வைத்தனர்.
டீக்கடைக்கு சீல்
இதேபோல் வெள்ளியணை கடைவீதியிலுள்ள ஒரு டீக்கடையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 1½ கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த டீக்கடைக்கும் சீல் வைத்தனர்.

Next Story