பெண் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்;கஞ்சா வியாபாரி கைது


பெண் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்;கஞ்சா வியாபாரி கைது
x
தினத்தந்தி 24 Aug 2021 12:26 AM IST (Updated: 24 Aug 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

பெண் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.

பரமக்குடி,

பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் வல்லம்பர் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் என்ற சந்தோஷ் குமார் (வயது 20). கஞ்சா வியாபாரி. சம்பவத்தன்று இவர் சாக்கு பையில் கஞ்சா வைத்திருப்பதாக பார்த்திபனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாவிற்கு தகவல் கிடைத்தது.அதன்படி இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த சந்தோஷ்குமாரை பிடிக்க முயன்றனர். அப்போது சந்தோஷ்குமார் கையில் வைத்திருந்த வாளை போலீசாரிடம் காட்டி பிடித்தால் வெட்டி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆனாலும் போலீசார் சந்தோஷ்குமாரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்பு அவன் வைத்திருந்த சாக்குப் பையை சோதனை செய்த போது அதில் 1½ கிலோ கஞ்சா இருந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுதா கொடுத்த புகாரின் பேரில் பார்த்திபனூர் போலீசார் சந்தோஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story