ஏலகிரி மலை சுற்றுலாத்தலம் திறக்கப்படாததால் பயணிகள் ஏமாற்றம்


ஏலகிரி மலை சுற்றுலாத்தலம் திறக்கப்படாததால்  பயணிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 24 Aug 2021 12:31 AM IST (Updated: 24 Aug 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஏலகிரி மலை சுற்றுலாத் தலம் திறக்கப்படாததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஜோலார்பேட்டை

ஏலகிரி மலை சுற்றுலாத் தலம் திறக்கப்படாததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

சுற்றுலாத்தலம் திறக்கவில்லை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு பல்வேறு இடங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று 2- வது அலை காரணமாக தமிழகம் முழுவதும் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தியேட்டர்கள், பூங்காக்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்ட நிலையில் ஏலகிரி மலை சுற்றுலா தலம் திறக்கப்படவில்லை.

பயணிகள் ஏமாற்றம்

இதனால் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏலகிரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் நேற்று படகுத்துறை, இயற்கை பூங்கா உள்ளிட்டவை பூட்டி கிடந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அதேபோன்று படகு இல்லம் ரோட்டில் சுற்றுலா பயணிகளை நம்பி கடைகள் வைத்த வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகினர். எனவே ஏலகிரி மலை சுற்றுலாத் தலத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story