வாணியம்பாடி பஸ் நிலையத்தில் பெண்ணை ஆசைக்கு இணங்க அழைத்த ஊர்க்காவல்படை வீரர்
வாணியம்பாடி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த ெபண்ணை ஊர்க்காவல் படை வீரர் ஆசைக்கு இணங்க அழைத்தார். ஆத்திரம் அடைந்த அப்பெண் சக பயணிகளுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி
வாணியம்பாடி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த ெபண்ணை ஊர்க்காவல் படை வீரர் ஆசைக்கு இணங்க அழைத்தார். ஆத்திரம் அடைந்த அப்பெண் சக பயணிகளுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊர்க்காவல் படை வீரர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கோணமேடு பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 27). இவர் 5 ஆண்டுகளாக வாணியம்பாடியில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார். நேற்று சென்னாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் திருப்பத்தூரில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் செல்வதற்காக தனது தோழியுடன் வாணியம்பாடி பஸ் நிலையத்துக்கு வந்தார்.
அங்கு, பஸ்சுக்காக காத்திருந்தபோது, அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படை வீரர் சபரிநாதன் அப்பெண்ணையே சுற்றி சுற்றி வந்ததாகவும், அவரிடம் செல்போன் எண்ணை கேட்டு தொந்தரவு செய்ததாகவும் தெரிகிறது.
திடீர் சாலை மறியல்
மேலும் அப்ெபண்ணின் செல்போன் எண்ணை ேகட்டு எழுதி அருகில் உள்ள இருசக்கர வாகனத்தில் வைத்துள்ளார். இதையறிந்த பத்மா பயந்து அலறி கூச்சலிட்டார். அவரின் கூச்சல் சத்தத்தைக் கேட்டதும் அங்கு நின்றிருந்த பஸ் பயணிகள் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்களிடம் தனக்கு நேர்ந்த சம்பவத்தை கூறினார்.
சம்பவத்தைக் கேட்டதும் ஆத்திரம் அடைந்த பெண்கள் அப்பெண்ணுடன் சேர்ந்து ஊர்க்காவல் படை வீரர் சபரிநாதனை கைது செய்யக்கோரி அப்பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து ஊர்க்காவல் படை வீரர் தப்பியோடிவிட்டார்.
பேச்சுவார்த்தை
போலீசார் விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததும் அனைவரும் கலைந்து சென்றனர். பெண்ணிடம் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சபரிநாதனை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story