தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிவகாசி,
திருத்தங்கல் எஸ்.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன் கற்குவேல்ராஜா, மாணவி பிரேமலதா இருவரும் காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றனர். இதே போல் இதே பள்ளியில் படித்து வரும் லத்திகா என்ற மாணவியும் சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலபதக்கம் பெற்றார். பதக்கம் பெற்ற சாதனை மாணவர்களுக்கு நேற்று காலை எஸ்.ஆர்.பெண்கள் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமையாசிரியர் நூர்ஜகான் கலந்து கொண்டு சாதனை மாணவர்களை பாராட்டி அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் 89-ம் வருடம் படித்த பழைய மாணவர்கள் சங்கம் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் சிலம்பாட்ட பயிற்சியாளர் பிரபாகரன், தொழிலதிபர்கள் குணசேகரன், ஆனந்தராஜ், கோவிந்தராஜ், முருகேசன், ஜெயப்பாண்டி, சங்கர்கணேஷ், ராஜ்குமார், ரவி. குமார்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். சிலம்ப போட்டியில் பரிசு பெற்ற மாணவன் கற்குவேல் ராஜா, மாணவி பிரேமலதா இருவரும் அண்ணன்-தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story