திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்றம்
கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்றம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மக்கள் நாடாளுமன்றம் நடத்தி கண்டன தீர்மானம் நிறைவேற்றி பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி திருப்பத்தூரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் எம்.சுந்தரேசன் தலைமை தாங்கி பேசினார். நகர துணை செயலாளர்கள் முருகன், பைரோஸ், மயில்வாகனன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், ெரயில்வே, வங்கி, காப்பீடு, ராணுவம், தொழிற்சாலைகளை தனியாருக்கு கொடுக்காதே, நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை உடைக்காதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றி பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினார்கள்.
அதேபோன்று ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியிலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்றம் கூட்டம் நடைபெற்றது. ராஜி என்பவர் தேசிய கொடி ஏற்றினார். தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் பாடி மக்கள் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற தலைவராக நகர செயலாளர் கே.பி.மணி பேசினார். முன்னாள் மாவட்ட செயலாளர் முல்லை நாடாளுமன்ற விவாதத்தை தொடங்கினார். மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் கே.ஆர்.வேணுகோபால், விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் கே.கே.துரைராசன், கிளை செயலாளர்கள் ஆர்.எஸ்.தருமன், சி.குடியண்ணன் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்பட்டு பேசினார்கள்.
Related Tags :
Next Story