மாவட்ட செய்திகள்

திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்தில் குவிந்த மக்கள் + "||" + Travel

திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்தில் குவிந்த மக்கள்

திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்தில் குவிந்த மக்கள்
திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்தில் குவிந்த மக்கள்
திருச்சி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா மையமாக முக்கொம்பு உள்ளது. அகண்ட காவிரி ஆற்றில் காவிரி, கொள்ளிடம் ஆறு பிரிந்து செல்வது இயற்கையாக அமைந்துள்ளது சிறப்பாகும்.
மேலும் இங்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக சிறுவர்கள் விளையாடக்கூடிய சிறுவர் ெரயில், சிறுவர் முதல் பெரியவர் வரை மகிழ்விக்கும் விதமாக ராட்டினங்களும் அமைந்துள்ளது.

இதனால் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு வருவார்கள்.
சுற்றுலா மையங்களில் அனுமதி
கொரோனா ஊரடங்கு காரணமாக முக்கொம்பு சுற்றுலா மையம் மூடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் ஊரடங்கு தளர்வில் சுற்றுலா மையங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி முக்கொம்பு சுற்றுலா மையம் கடந்த 22 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது.
காலை முதல் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அப்போது, சுற்றுலா பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.  முதல்நாளே ஏராளமானோர் முக்கொம்பு சுற்றுலா மையத்தில் குவிந்தனர். அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ராட்டினங்கள், ஊஞ்சல்கள், போன்றவற்றில் விளையாடி மகிழ்ந்தனர்.  இன்னும் சிலர் தங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை குடும்பத்துடன் மரத்தின் நிழலில் அமர்ந்து சாப்பிட்டனர். முதல்நாளான நேற்று முக்கொம்பு சுற்றுலா மையத்துக்கு 800-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. வரலாறு படைத்தது ‘ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் பொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி சாதனை
அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் பொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி வைத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.‌
2. தடையை மீறி மாமல்லபுரத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள் கம்பி வேலிக்கு வெளியே நின்று புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்
தடையை மீறி மாமல்லபுரத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள் கம்பி வேலிக்கு வெளியே நின்று புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்.
3. சுற்றுலாவுடன் தொடர்புடையவர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை; மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
சுற்றுலாவுடன் தொடர்புடைய ஓட்டல் ஊழியர்கள், டிரைவர்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கூறியுள்ளது.
4. டயர்கள் வெடித்ததில் சுற்றுலா வேன் கவிழ்ந்தது
டயர்கள் வெடித்ததில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 3 பேர் காயமடைந்தனர்.
5. மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.