நூற்பாலையில் திடீர் தீ விபத்து
ராஜபாளையம் நூற்பாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாயின.
ராஜபாளையம்,
ராஜபாளையம் நூற்பாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாயின.
நூற்பாலை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அயோத்தி ராம் நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகே நூற்பாலை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆலையை மூடி விட்டு சென்றுவிட்டார். இந்தநிலையில் நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் மீண்டும் மின்சாரம் வந்த போது ஏற்பட்ட மின் கசிவில் எந்திர அறைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு பொதிகளில் தீப்பொறி பட்டுள்ளது.
தீயில் எரிந்து சேதம்
இதையடுத்து பஞ்சு முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக எந்திரங்கள் இருந்த பகுதிக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ராஜபாளையம் தீயணைப்பு படையினர், 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பஞ்சு, கோன் மூடைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள், நூற்பாலை எந்திரங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story