பூங்காவில் மது அருந்திய வாலிபர்களை விரட்டி பிடித்த போலீசார்


பூங்காவில் மது அருந்திய வாலிபர்களை விரட்டி பிடித்த போலீசார்
x
தினத்தந்தி 24 Aug 2021 1:11 AM IST (Updated: 24 Aug 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பூங்காவில் பட்டப்பகலில் வாலிபர்கள் மது அருந்தினர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.

மலைக்கோட்டை, ஆக.24-
திருச்சி பூங்காவில் பட்டப்பகலில் வாலிபர்கள் மது அருந்தினர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.
பூங்கா
திருச்சி மாநகராட்சி  17-வது வார்டில் திரவியம் பிள்ளை பூங்கா உள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட இந்த பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள தென்னூர் அறிவியல் பூங்கா, சிறுவர் பூங்காக்கள் பல திறக்கப்பட்டுள்ள நிலையில் திரவியம் பிள்ளை பூங்கா, கள்ளர்தெருவில் உள்ள ஒரு பூங்கா ஆகிய பூங்காக்கள் திறக்கப்படாமல் உள்ளன.
குடிமகன்கள்
இந்த பூங்காக்களை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.  இதனை குடிமகன்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
பகல், இரவு என்று பாராது எந்நேரமும் அந்த பூங்காக்களை மது அருந்தும் பாராக பயன்படுத்தி வருகின்றனர். பூங்காக்களில் எங்கு பார்த்தாலும் காலி மதுபாட்டில்களே அதிக அளவில் கிடக்கிறது. மின் விளக்குகள், மின் விசிறிகள், இருக்கைகள் உடைந்து கிடக்கிறது.
விரட்டி பிடித்த போலீசார்
இந்்த நிலையில் திருச்சி கோட்டை போலீசார் நேற்று திடீரென திரவியம்பிள்ளை பூங்காவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாவகாசமாக உட்கார்ந்து மது அருந்திக் கொண்டிருந்த வாலிபர்களை விரட்டி, விரட்டி பிடித்தனர். இதில் பள்ளி மாணவர்களும் அடங்குவர் என்பது வேதனை தரும் விஷயமாகும்.
பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்தநிலையை மாற்ற பூங்காவை உடனடியாக திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story