காசி விசுவநாதர் கோவிலில் சூரிய வழிபாடு
காசி விசுவநாதர் கோவிலில் சூரிய வழிபாடு
திருச்சி, ஆக.24-
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே திருச்சி-கல்லணை சாலையில் சர்க்கார்பாளையத்தில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த காசிவிசுவநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் 7, 8 மற்றும் 9-ந் தேதிகளில் 3 நாட்கள் மட்டும் மூலவர் காசிவிசுவநாதர் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி நேரடியாக விழுவது வழக்கம். இது சூரிய வழிபாடு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு சூரிய வழிபாடு நேற்று அதிகாலை நடந்தது.
சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும்போது வழிபாடு நடத்தினால் நல்ல பலன்தரும் என்பதால், இந்த அரியநிகழ்ச்சியை காண கோவில் வளாகத்தில் அதிகாலையில் இருந்தே திரளான பக்தர்கள் காத்திருந்தனர். ஆனால் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் சூரிய ஒளி துல்லியமாக சிவலிங்கத்தின் மீது விழவில்லை. அதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) இந்த சூரிய வழிபாடு நடக்கிறது.

Related Tags :
Next Story