மணல் கடத்தல்; 2 பேர் கைது
தினத்தந்தி 24 Aug 2021 1:24 AM IST (Updated: 24 Aug 2021 1:24 AM IST)
Text Sizeமணல் கடத்தல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள அத்தியூர் இந்திரா நகர் கிழக்கு தெருவை சேர்ந்த முருகேசனின் மகன் ராஜவேல்(வயது 24). இவர், சரக்கு வேனில் அரசு அனுமதி இன்றி மணல் மூட்டை ஏற்றிச்சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மங்களமேடு போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர்.
இதேபோல் பெருமத்தூர் வடக்கு தெருவில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளிச்சென்ற பெருமத்தூர் நல்லூர் கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமியை(40) போலீசார் கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire