கார் மோதி வாலிபர் பலி
கார் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மங்களமேடு:
கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தை சேர்ந்தவர் சையது முகமது(வயது 21). இவர் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த தேவையூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் தேவையூரில் இருந்து பெரம்பலூருக்கு ஒரு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, புதுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story