ரெயிலில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி


ரெயிலில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 24 Aug 2021 1:28 AM IST (Updated: 24 Aug 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் பலியானார்.

 திண்டுக்கல் :

வடமதுரை அருகே உள்ள மூக்கரபிள்ளையார் கோவில் ரெயில்வே கேட் அருகே, ரெயிலில் அடிபட்ட நிலையில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் நேற்று பிணமாக கிடந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே அந்த வாலிபரின் சட்டைப்பையில் இருந்து அடையாள அட்டை ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர், விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை தேவி நகரை சேர்ந்த வீராச்சாமி மகன் கார்த்திக் (வயது 25) என்று இருந்தது. இவர், மதுரையில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் தூத்துக்குடியில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு வேலை விஷயமாக முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் இரவு சென்றிருக்கிறார். 

வடமதுரை அருகே சென்று கொண்டிருந்தபோது, ரெயிலில் இருந்து அவர் தவறி விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story