தஞ்சையில் நகை வியாபாரிகள் கடைஅடைப்பு
தங்க நகைகளுக்கு தனி ஹால்மார்க் அடையாள எண் கட்டாயமாக்கப்படுவதை கண்டித்து தஞ்சையில் நேற்று நகை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
தங்க நகைகளுக்கு தனி ஹால்மார்க் அடையாள எண் கட்டாயமாக்கப்படுவதை கண்டித்து தஞ்சையில் நேற்று நகை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகை வியாபாரிகள் எதிர்ப்பு
தங்க நகைகளின் தரத்தை குறிக்க அவற்றில் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்படுகிறது. இதனால் மக்கள் நம்பிக்கையுடன் தங்க நகைகளை வாங்குகின்றனர். இதற்கிடையே மத்திய அரசு தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிப்பதை கட்டாயமாக்கி உள்ளது.
தங்க நகைகளிலும் 6 இலக்கம் கொண்ட தனி ஹால்மார்க் அடையாள எண்ணை பதிவு செய்ய வேண்டும் என இந்திய தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு நகை வியாபாரிகள் மத்தியம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கடைகள் அடைப்பு
இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நகை கடைகள் காலை 9 மணி முதல் 11.30 மணி வரை அடைத்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
தஞ்சை மாநகரில் அய்யங்கடைத்தெரு, தொப்புள்பிள்ளையார்கோவில், தெற்குஅலங்கம், தென்கீழ்அலங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 175 நகை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் 1,500 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ஆர்ப்பாட்டம்
மேலும் தஞ்சை காசுக்கடைத் தெரு, அய்யங்கடைத் தெரு, தலைமை தபால் நிலையம் முன்பு உள்ளிட்ட இடங்களில் வெவ்வேறு நகை வியாபாரிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story