குமரியில் நகைக்கடைகள் 2½ மணி நேரம் அடைப்பு
தனி ஹால்மார்க் அடையாள எண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் நகைக்கடைகள் 2½ மணி நேரம் அடைக்கப்பட்டன.
நாகர்கோவில்,
தனி ஹால்மார்க் அடையாள எண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் நகைக்கடைகள் 2½ மணி நேரம் அடைக்கப்பட்டன.
எதிர்ப்பு
தங்க நகைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளிலும் 6 இலக்கம் கொண்ட தனி 'ஹால்மார்க்' அடையாள எண்ணை (எச்.யு.ஐ.டி.) பதிவு செய்ய வேண்டும் என இந்திய தர நிர்ணய ஆணையம் (பி.ஐ.எஸ்.) அறிவித்திருக்கிறது. இந்த தனி அடையாள எண் மூலம் தங்கநகை எங்கு உருவாக்கப்படுகிறது? யார் மூலம் விற்பனை செய்யப்படுகிறது? யார் வாங்குகிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
ஆனால் இதற்கு நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்திய தர நிர்ணய ஆணையம் நகையின் தரத்தை பார்ப்பதை விட்டு விட்டு, தனி ஹால்மார்க் அடையாள எண்ணை கொண்டு வருவது தேவையில்லாதது என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக சென்னையில் நேற்று நகைக்கடைகள் சுமார் 2½ மணி நேரம் மூடப்பட்டன.
மூடப்பட்டன
அதே போல் குமரி மாவட்டத்திலும் நேற்று நகைக்கடைகளை அதன் உரிமையாளர்கள் 2½ மணி நேரம் அடைத்தனர். நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்த கடை அடைப்பு போராட்டம் நடந்தது.
நாகர்கோவிலை பொருத்த வரை மீனாட்சிபுரம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, வடசேரி ஆகிய இடங்களில் உள்ள நகைக்கடைகள் மூடப்பட்டு இருந்தன.
Related Tags :
Next Story