மைசூருவில் கால்வாயில் குதித்து தம்பதி தற்கொலை


மைசூருவில் கால்வாயில் குதித்து தம்பதி தற்கொலை
x
தினத்தந்தி 24 Aug 2021 3:10 AM IST (Updated: 24 Aug 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

நஞ்சன்கூடு அருகே குடும்பத்தகராறில் கால்வாயில் குதித்து தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

மைசூரு: நஞ்சன்கூடு அருகே குடும்பத்தகராறில் கால்வாயில் குதித்து தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

குடும்பத்தகராறு

ைமசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா இம்மாவுஉண்டி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ்(35). விவசாயி. இவரது மனைவி ஷோபா(28). பசவராஜுக்கும், ஷோபாவுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது. இந்த தம்பதிக்கு 5 வயதில் மகன் உள்ளான்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பசவராஜுக்கும், ஷோபாவுக்கும் குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் கணவன், மனைவி அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இதைதொடர்ந்து இம்மாவு உண்டி கிராம பஞ்சாயத்து தலைவர்கள், தம்பதியை அழைத்து தகராறு இன்றி வாழ்க்கை நடத்தும்படி புத்திமதி கூறி அனுப்பினர். ஆனாலும் தம்பதியினர் சண்டை போட்டு கொண்டு வந்துள்ளனர்.

தம்பதி தற்கொலை

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மீண்டும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வருவதால் தம்பதியினர் மனமுடைந்ததாக தெரிகிறது. மேலும் தற்கொலை செய்யவும் முடிவு செய்துள்ளனர். அதன்படி தம்பதியினர் 2 பேரும் இம்மாவு உண்டி கிராமம் அருகே ஒடும் கபினி கால்வாய்க்கு வந்தனர். அங்கு 2 பேரும் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த நஞ்சன்கூடு புறநகர் போலீசார், தீயணைப்பு படைவீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். 

சோகம்

பின்னர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், குடும்பத்தகராறு காரணமாக கால்வாயில் குதித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து நஞ்சன்கூடு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மைசூருவில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story