சேலம் மாவட்டத்தில் 80 பேருக்கு கொரோனா


சேலம்  மாவட்டத்தில் 80 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Aug 2021 4:09 AM IST (Updated: 24 Aug 2021 4:09 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 80 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 80 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 82 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று புதிதாக 80 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதியில் 19 பேர், ஓமலூரில் 7 பேர், கொளத்தூர் மற்றும் சங்ககிரியில் தலா 4 பேர், மகுடஞ்சாவடி, அயோத்தியாப்பட்டணம், வீரபாண்டி, மேட்டூரில் தலா 3 பேர், எடப்பாடி, மேச்சேரி, நங்கவள்ளி, சேலம் ஒன்றியம், தாரமங்கலம், ஆத்தூரில் தலா 2 பேர், காடையாம்பட்டி, கெங்கவல்லி, வாழப்பாடியில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
 ஆஸ்பத்திரியில் சிகிச்சை
மேலும், சேலத்திற்கு நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த தலா 4 பேர், சென்னை, ஈரோட்டில் இருந்து வந்த தலா 3 பேர், தர்மபுரி, கோவையில் இருந்து வந்த 2 பேர், கரூரில் இருந்த வந்த ஒருவர் என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 606 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story