கூடுதல் தளர்வுகள் எதிரொலி: சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது-பயணிகள் மகிழ்ச்சி

கூடுதல் தளர்வுகள் எதிரொலி: சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது-பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 24 Aug 2021 4:09 AM IST (Updated: 24 Aug 2021 4:09 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம்:
கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பஸ் போக்குவரத்து
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அரசு போக்குவரத்து தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சேலத்தில் இருந்து நேற்று மீண்டும் பெங்களூருவுக்கு அரசு பஸ் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது.
பயணிகள் மகிழ்ச்சி
சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு வழக்கமாக 42 அரசு பஸ்கள் இயக்கப்படும். தற்போது 34 பஸ்கள் மட்டும் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரத்தில் 8 குளிர்சாதன வசதி உடைய பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலை, கொள்ளேகால் வழியாக 18 அரசு பஸ்கள் மைசூருக்கு இயக்கப்படும். ஆனால் நேற்று 10 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன.
மேலும், ஆந்திர மாநிலம் திருப்பதிக்கும் சேலத்தில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டது. 4 மாதங்களுக்கு பிறகு சேலத்தில் இருந்து பெங்களூரு மற்றும் மைசூரு, திருப்பதிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story