சேலம் மாவட்டத்தில் 50 சதவீத தியேட்டர்கள் திறப்பு- பூங்காக்கள் திறக்கப்படாததால் மக்கள் ஏமாற்றம்
சேலம் மாவட்டத்தில் 50 சதவீத தியேட்டர்கள் திறக்கப்பட்டன. மேலும் பூங்காக்கள் திறக்கப்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 50 சதவீத தியேட்டர்கள் திறக்கப்பட்டன. மேலும் பூங்காக்கள் திறக்கப்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தியேட்டர்கள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் நேற்று முதல் தியேட்டர்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நேற்று குறிப்பிட்ட சில தியேட்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டன. பெரும்பாலான தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்தது. அனைத்து தியேட்டர்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பராமரிப்பு பணி நடந்தது.
அதேநேரத்தில் புதுப்படம் வெளியீடு இல்லாததால் ரசிகர்கள் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் 50 சதவீத தியேட்டர்கள் திறக்கப்படவில்லை என்று அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். சேலம் மாநகரில் உள்ள தியேட்டர்கள் நேற்று காலை திறக்கப்பட்டாலும் ரசிகர்கள் யாரும் படம் பார்க்க வரவில்லை. இதனால் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
பொதுமக்கள் ஏமாற்றம்
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏற்காடு அடிவாரம் உயிரியல் பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் வனத்துறை சார்பில் தகுந்த வழிகாட்டுதல்கள் வராததால் நேற்று பூங்கா திறக்கப்படவில்லை. சேலம் மாநகரில் அண்ணா பூங்காவும் நேற்று திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்த பூங்காக்கள் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி திறக்கப்படும்பட்சத்தில் அரசு கூறும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story