கடலில் மீன் பிடித்துவிட்டு திரும்பியபோது, படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் பலி


கடலில் மீன் பிடித்துவிட்டு திரும்பியபோது, படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் பலி
x
தினத்தந்தி 24 Aug 2021 11:37 AM IST (Updated: 24 Aug 2021 11:37 AM IST)
t-max-icont-min-icon

எண்ணூர் பெரிய காசிகோவில் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). மீனவரான இவர், நேற்று அதிகாலை தனது உறவினரான ராஜேந்திரன் (60), மற்றொரு ஆறுமுகம் (41) ஆகியோருடன் பாரதியார் நகர் கடற்கரையில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றார்.

கடலில் மீன்பிடித்து விட்டு காலை 8 மணிக்கு கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஆறுமுகம் (55) படகில் இருந்து திடீரென தவறி கடலுக்குள் விழுந்து விட்டார். உடன் சென்றவர்கள், அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் ஆறுமுகம் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்து போனார். இதுபற்றி எண்ணூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story