பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பேனர் வைத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு


பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பேனர் வைத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு
x
தினத்தந்தி 24 Aug 2021 12:41 PM IST (Updated: 24 Aug 2021 12:41 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த ஈக்காடு சந்திப்பு பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த ஈக்காடு பகுதியை சேர்ந்த பார்த்திபன் (வயது 30) என்பவர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக அனுமதியின்றி பேனர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து போலீசார் அனுமதியின்றி பேனர் வைத்த பார்த்திபன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story