பாடல் பாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய ரெயில்வே போலீசார்


பாடல் பாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய ரெயில்வே போலீசார்
x
தினத்தந்தி 24 Aug 2021 7:23 PM IST (Updated: 24 Aug 2021 7:23 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பாடல் பாடி ரெயில்வே போலீசார் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினா்.

விழுப்புரம், 

விழுப்புரம் ரெயில்வே காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நடைபெற்றது. முகாமிற்கு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்நாதன், ரவிச்சந்திரன், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், ரெயில் நிலைய பயணிகளிடம் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் குறித்தும், அந்நோயை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ரெயில்வே போலீசார் விழிப்புணர்வு பாடல் பாடியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். மேலும் ரெயில் பயணத்தின்போது பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு அல்லது சானிடைசரால் நன்கு கழுவ வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி முக கவசம், சானிடைசர், சோப்பு, குளிர்பான பாட்டில்கள் ஆகியவற்றை வழங்கினர். அதோடு பயணிகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இம்முகாமில் ரெயில்வே போலீஸ் ஏட்டு ரவி, போலீசார் மணிகண்டன், சாமுண்டீஸ்வரி, இளையராணி, சத்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story