நிரம்பி வழியும் வரதமாநதி அணை
கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையினால் வரதமாநதி அணை நிரம்பி வழகிறது.
பழனி:
கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, பழனி பகுதியில் உள்ள அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக பழனி-கொடைக்கானல் சாலையில் உள்ள வரதமாநதி அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.
66 அடி உயரம் கொண்ட வரதமாநதி அணை நேற்று காலை நிரம்பி மறுகால் பாய்ந்தது. அணைக்கு வினாடிக்கு 105 கனஅடி தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
அணை நிரம்பியதால், அதன் மூலம் பாசன வசதி பெறும் ஆயக்குடி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 7-ந்தேதி, வரதமாநதி அணை முழு கொள்ளளவை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் 65 அடி உயரம் கொண்ட பாலாறு-பொருந்தலாறு அணையில் தற்போது 41 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 480 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. இதில் 22 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
-----------
Related Tags :
Next Story