போளூரில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ரூ.26 கோடி பாக்கித்தொகையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போளூர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர்் தாலுகா அலுவலகம் முன்பாக கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போளூர் தனியார் சர்க்கரை ஆலை வழங்கவேண்டிய நிலுவை பாக்கித்தொகை ரூ.26 கோடியை பெற்றுத்தர வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் கையில் கரும்பு ஏந்தி கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ஜி.மணி தலைமை வகித்தார்.
மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் கன்டன உரையாற்றினார்.
மாவட்ட நிர்வாகிகள் பாலமுருகன், உதயகுமார் உள்ளிட்ட பலர் பேசினர்.
Related Tags :
Next Story