திண்டுக்கல் கோட்டை குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
திண்டுக்கல் கோட்டை குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
திண்டுக்கல்:
கோட்டை குளம்
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் கோட்டை குளம் உள்ளது. இந்த குளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டு மழைநீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. மலைக்கோட்டையில் இருந்து வழிந்தோடும் மழைநீர் கோட்டை குளத்தில் சேருகிறது.
திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு கோவில்களின் திருவிழாவுக்கு, கோட்டை குளத்தில் இருந்து தான் கரகம் அலங்கரித்து எடுத்து செல்லப்படுகிறது. இதனால் கோட்டை குளத்தில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டது.
மேலும் குளத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதற்கு இரும்பு வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது.
செத்து மிதந்த மீன்கள்
இந்த குளத்தில் ஜிலேபி கெண்டை உள்பட பல்வேறு வகையான மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இதனால் அருகில் உள்ள கோவில்களுக்கு வருவோர் மீன்களுக்கு பொறியை உணவாக இட்டு செல்வார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கோட்டை குளத்தில் மீன்கள் செத்து மிதக்க தொடங்கின.
இதைத்தொடர்ந்து நேற்றும் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. மேலும் மீன்கள் அழுகி துர்நாற்றம் வீசியது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ரெங்கராஜன் தலைமையிலான ஊழியர்கள் அங்கு வந்தனர். பின்னர் குளத்தில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தினர்.
அப்போது குளத்தில் செத்து மிதந்த மீன்களின் வாயில் இருந்து ரத்தம் வெளியேறி இருந்தது. இதனால் மர்ம நபர்கள் குளத்தில் விஷம் கலந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. எனவே, பரிசோதனை செய்வதற்காக குளத்தின் தண்ணீர் மாதிரி சேகரித்து சென்றனர்.
Related Tags :
Next Story