கோவையில் தினமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி


கோவையில் தினமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
x
தினத்தந்தி 24 Aug 2021 9:06 PM IST (Updated: 24 Aug 2021 9:06 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் தினமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி

கோவை

கோவையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

தமிழகத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி 66 சதவீதம் உள்ளது. ஆனால் கோவையில் 45 சதவீதம் பேருக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

 எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கோவை உள்ளிட்ட மேற்கு மண்டல பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன.

இதனால் வாரத்தில் 3 அல்லது 4 முறை மட்டுமே தடுப்பூசி செலுத்தப் பட்ட நிலை மாறப்பட்டு தினமும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 20-ந் தேதி 32 மையங்களில் 12,800 பேருக்கும், 

21-ந் தேதி 54 மையங்களில் 12,010 பேருக்கும், 22-ந் தேதி 86 மையங்களில் 28,300 பேருக்கும், 23-ந் தேதி 148 மையங்களில் 30,500 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பெண்களுக்கு தடுப்பூசி

கணபதி, சின்னவேடம்பட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

மணியகாரம்பாளையம், உடை யாம்பாளையம், அஞ்சுகம் நகர் பகுதிகளில் நேற்று 900 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அந்த வகையில் நேற்று மொத்தம் 33 மையங்களில் 9,900 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதேபோல் ஊரக பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களில் கருவுற்ற பெண்கள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

2- வது தவணை தடுப்பூசி செலுத்துவோருக்கு முகாம்களில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story